அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி உட்கடை அ.புதுப்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியார் கால்வாய் அருகே அமைந்துள்ள ஸ்ரீ கத்திரிக்காய் மலையாண்டி சித்தர், ஸ்ரீ கருப்பணசுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக அழகர்கோவில் சென்று தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புன்யாக வாசனம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டு காலை யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி ஸ்ரீ கத்திரிக்காய் சித்தர்,ஸ்ரீ கருப்பணசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு வருஷாபிஷேக வைபவம் நடைபெற்றது. பின்னர் வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.