கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் தர்ம பிரசார் சமீதியின் 60 வது ஆண்டு விழா வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெகு சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவில் சுமார் 75 குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர் அவர்கள் அனைவருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் தர்ம பிரசார் சமீதியின் ஒன்றிய செயலாளர் குட்டன் திருமேனி தலைமையில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது
இந்த சிறப்பு வாய்ந்த விழாவில் பிரம்ம குமாரிகள் சார்பாக சகோதரி கற்பகம் கலந்து கொண்டு குழந்தைகளின் நடன நிகழ்ச்சியை நடத்தினார் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் குழந்தைகளின் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்