பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா….

சுட்டி குழந்தைகள் கிருஷ்ணன் , ராதே போன்று வேடமணிந்து
ஏராளமானோர் பங்கேற்பு…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
விழாவை யொட்டி நல்லூர் பாடசாலை மாணவ,மாணவிகள் மற்றும் பாபநாசம் ஸ்ரீகலைக்கோயில் இசை பள்ளியை சேர்ந்த மாணவிகள் இணைந்து ராதே,கிருஷ்ணன் வேடமணிந்து பங்கேற்ற கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள்நடைபெற்றது.
தொடர்ந்து உறியடி உற்சவமும் நடைபெற்றது இதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது திரான பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நல்லூர் ராஜா பாடசாலை நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.