வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில்ஆவணி கடைசி ஞாயிறு நடைபெறும் தெப்ப திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் ஆலயம்தமிழகத்தில் தலைசிறந்த சக்தி தலத்தில் ஒன்றாகும். இவ்வாலயம் கும்பகோணம்-மன்னார்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த
ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம்
இரண்டாவது ஞாயிறுநடைபெறும் பாடைக் காவடி திருவிழாவில் மாநிலத்தில் பல்வேறுபகுதிகளில் இருந்து
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை
தரிசனம் செய்வது வழக்கம். அப்போதுபாடைக் காவடி, பால்
காவடி, பால் குடம்,அலகு காவடி, தொட்டியில் காவடி
உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்துவர்.
அதேபோன்று ஆவணிஞாயிறு மற்றும் அனைத்து ஞாயிரிலும்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவது வழக்கம்.ஆவணி ஞாயிறு அனைத்தும் காலையில்சிறப்பு அபிஷேகம், மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மன்காட்சியளிப்பார்.
வரும்17-ந்தேதி ஆவணி கடைஞாயிறை முன்னிட்டுகாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும்காலை 11.30 மணிக்கு அம்மன் வெள்ளி அன்னவாகனத்தில் வீதியுலா காட்சியும், இரவு 8-மணிக்கு ஆலயத்தின் அருகில் உள்ள புனிதகுளத்தில் அம்மன் தெப்பத்தில் எழந்தருளிபக்தர்களுக்கு அருள்
பாலிப்பார்,அது சமயம்தெப்பத்தில் வலங்கைஎஸ். ஏ. எஸ். சந்திரசேகரன்,ஆலங்குடி ஏ. வி. என்.பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும், வாணவேடிக்கையும்நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு தெப்பக்குளம்தூய்மை செய்யப்பட்டு,தண்ணீர் நிரப்பும் பணி
ஆலய நிர்வாகத்தினர்செய்து வருகின்றனர்
,தெப்பத் திருவிழாவின் போது காவல் துறையினர், தீயணைப்புதுறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சிறப்பு பேரூந்து வசதிகளும்செய்யப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர்ஆ. ரமேஷ், தக்கார்/ ஆய்வர் எஸ். தமிழ்மணி,அலுவலக மேலாளர்
தீ. சீனிவாசன் மற்றும்திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் சிறப்பாகசெய்து வருகின்றனர்.