மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் உலக மக்கள் நன்மை வேண்டியும்,விவசாயம் செழிக்கவும்,மழை வேண்டியும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கலந்து கொண்ட பெண்களுக்கு குங்குமம், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பூஜை பிரசாதத்துடன், அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது.