வ .உ .சி . புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது !கவிஞர் இரா .இரவி ! உலகநாதபிள்ளை பரமாயியம்மாள் மகனாகப் பிறந்தவர் !
ஒட்டப்பிடாரம் என்ற ஊருக்கு புகழ் பல சேர்த்தவர் !

பள்ளிப்படிப்பை புனிதசேவியர் கால்டுவேலில் பயின்றவர் !
கல்லூரிப்படிப்பு திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் முடித்தவர்!

சட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளி நகரில் கற்றவர் !
சட்டம் முடித்து வழக்கறிஞர் பணி திறம்படயாற்றியவர் !

ஏழை மக்களுக்காக வழக்கறிஞராக உதவிகள் புரிந்தவர்!
இனிய மகாகவி பாரதியாரோடு நட்புடன் பழகியவர் !

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை அன்றே விதைத்தவர் !
தொழிலாளர்களுக்கு வாரவிடுமுறையைப் பெற்றுத் தந்தவர் !

கப்பல் நிறுவனம் தொடங்கி கப்பலோட்டிய தமிழர் !
கப்பம் வசூலித்த ஆங்கிலேயனுக்கு சிம்ம சொப்பனமானவர் !

சுப்பிமணிய சிவாவிற்கு அடைக்கலம் தந்ததற்கு தண்டனை !
சுதேசி கப்பல் ஒட்டிய வீரத்துணிவிற்கு தண்டனை !

கோவை மைய சிறையில் செக்கிழுத்த செம்மல் !
கொடிய சிறைக்கு அஞ்சாத சிங்கமாக வாழ்ந்தவர் !

விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்தவர் !
விடுதலைக்காக விவேகமாகச் சிந்தித்த வேங்கை அவர் !

தமிழர்களுக்கு தமிழக பூங்காக்களுக்கு அவர் பெயர் !
தமிழக சாலைகள் தெருக்கள் அனைத்திலும் அவர் பெயர் !

கப்பலோட்டிய தமிழர் என்றால் தரணிக்கு விளங்கும் !
கப்பல்களைப் பார்க்கையில் தெரிவது அவர் முகம் !

உடலால் வாழ்ந்திட்ட ஆண்டுகள் அறுபத்திநான்கு !
புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *