ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலம் சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட அச்சுத மங்கலம் சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

மகா கும்பாபிஷேக விழா நிகழ்வில் அதே பகுதியைச் சார்ந்த இஸ்லாமிய தோழர்கள் பக்தர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைத்து சீர்வரிசை எடுத்து, பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினர் வட்டமிட்டு சுற்றிய கருடபகவான் ஸ்ப்ரேவால் புனித நீர் தெளிக்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்களம் கிராமத்தில் அருள்மிகு சவுந்தரநாயகி சமேத மேகநாதசாமி திருக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது மூன்றாம் குலோத்துங்கன் சோழன் ஆட்சி காலத்தில் சேக்கிழார் கட்டப்பட்ட ஆலயம், சேக்கிழார் பிறந்த ஊர் குன்றத்தூர் ஆனால் அவர்களின் முன்னோர்கள் பிறந்த ஊர் அச்சுதமங்களம் அதனால் முன்னோர்கள் வாழ்ந்த ஊரில் இந்த திருக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு உள்ளது
கோவிலில் உள்ள ஜேரகரேஸ்வரர் சாமிக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து புலங்கள் அரசி சாதம் மற்றும் மிளகு ரசம் வைத்து நெய்வேத்தியம் செய்தால் தீராத உடல் காய்ச்சல் (ஜீரம்) நீக்கும் என்பது வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது
புகழ்வாய்ந்த சிறப்புமிக்க இந்த கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த ஏழாம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி 4 கால யாக பூஜைகள் முடிவடைந்து இன்று மகா பூர்ணாகிதி நடைபெற்றது, மேலதாலங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து கலசத்திற்கு மந்திரக்ங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
கும்பாபிஷேக விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து மேலும் புனித நீரை பக்தர்களுக்கு ஸஃபிரே மூலம் புனித நீரை தெளித்தனர். மேலும் மதநல்லினத்திற்கு எடுத்து காட்டாக அதே பகுதியைச் சார்ந்த உள்ள இஸ்லாமிய தோழர்கள் கும்பாபிஷேக விழாவிற்கு பேனர் வைத்தனர், மேலும் இஸ்லாமியர்கள் சீர் வரிசை எடுத்து ஊர்வலமாக யாகசாலைக்கு எடுத்து வந்தனர். மேலும் தேநீர், குடிநீர், நீர் மோர், குளிர்பானம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.