பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கபிஸ்தலம் அருகே திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்..
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் , ஸ்ரீ சுந்தர மஹா காளியம்மன், செல்லியம்மன் திருக்கோயில் , லட்சுமி நாராயணர் ஆகிய திருக்கோவில்களின் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நான்கு கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து புனித நீர் கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ திரௌபதி அம்மன் சன்னதியில் பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.