வெ.பார்த்தசாரதி, செய்தியாளர் விழுப்புரம்.
விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கிராம பொது மக்களால் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகத்தை யொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து சரியாக 10.15 மணிக்கு கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் முன்னென்று செய்திருந்தனர். விக்கிரவாண்டி கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.