புதுச்சேரி சபாநாயகருடன்
முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் சந்திப்பு

10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதற்காக முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

புதுச்சேரி

புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் திரு ஏம்பலம் செல்வம் அவர்களை இன்று புதுச்சேரி மாநில அஇஅதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மாசிலா குப்புசாமி,செல்வராஜ்,வெரோனிகா,வெங்கடேசன், ஞானப் பூங்கோதை,ஆஷா, ராஜ்பவன் ஐயப்பன்,கணபதி ஆகியோர் சந்தித்து அளித்த மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது எதிர்வரும் 20 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதை அறிகிறேன். தாங்கள் சபாநாயகராக இருக்கும் பொழுது நீண்ட காலத்திற்கு பிறகு முழு நிதி நிலை அறிக்கையை புதுச்சேரி முதல்வர் மரியாதைக்குரிய ரங்கசாமி அவர்கள் தாக்கல் செய்தார்

என்பது மகிழ்ச்சிகரமான செய்தி. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்த பிறகு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்கள் நலத்திட்டங்களை மிகச் சிறப்பான முறையில் இந்தியாவே பார்க்கும் வண்ணம் நிறைவேற்றி வருகிறது.

குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நல திட்ட வளர்ச்சி பணிகள் என பல்வேறு பணிகளை புதுவை மக்கள் நலன் கருதி புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்து வருகிறது.

அதற்கு மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்து வருகிறது.துணை நிலை ஆளுநர் அவர்களும் அரசை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு சாதனைகளில் மிகச் சிறந்த சாதனையாக அரசு பள்ளிகள் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 10 சதவிகித வரலாற்று சிறப்புமிக்க இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி அதை இந்த ஆண்டு செயல்படுத்திட நடவடிக்கை எடுத்த புதுச்சேரி முதல்வர் மரியாதைக்குரிய அண்ணன் ரங்கசாமி அவர்கள், மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக பாராட்டி ஒரு சிறப்பு தீர்மானத்தையும்,மிக முக்கிய காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நிறைவேற்றிய அண்ணன் முதல்வர் அவர்களை பாராட்டி வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி மாநில அஇஅதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *