வெ.முருகேசன் மாவட்ட செய்தியாளர் திண்டுக்கல்
தாடிக்கொம்பு சௌவுந்தரராஜ பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம்
தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்களாக 5 பேரை தேர்ந்தெடுத்து, தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் சார்பில் வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த வாசுதேவன், விக்னேஷ் பாலாஜி, சுசிலா, கேப்டன் பிரபாகரன், ராமானுஜம் ஆகிய 5 பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் 5 பேரும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக இன்று பதவி ஏற்றனர்.
பின்னர் இவர்கள் 5 பேரும் சேர்ந்து விக்னேஷ் பாலாஜியை தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.