இரா.மோகன்- தரங்கம்பாடி, செய்தியாளர்.
தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோயிலுக்கு தினம் தோறும் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் இங்கு மட்டுமே தங்கள் ஆயுள் விருத்திக்காக ஆயில் ஹோமம், மணிவிழா, சதாபிஷேகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் திரைப்பட நடிகர் ராதாரவி குடும்பத்துடன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்தார். பின்னர் கோ பூஜை, கஜ பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர்,அபிராமி, கால சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பாக நடிகர் ராதாரவி அவர்களுக்கு சுவாமி படமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.