பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு கூட்டம் ….

பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு….

தஞ்சாவூர் மாவட்டம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் வருகிற 19.09.2023 அன்று கொண்டாவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஆங்காங்கே அமைக்கப்படும் விநாயகர் சிலை தொடர்பாக விழா குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக பாபநாசம் துர்கா மஹாலில் சிறப்பு கூட்டம் பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் போது விநாயகர் சிலை நிறுவுதல், ஊர்வலமாக கொண்டு செல்லுதல், பின்னர் நீர் நிலைகளில் கரைத்தல் போன்ற நிகழ்வுகள் தொடர்பாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கோரியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி , சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சிலை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் விழாக் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *