ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இ ணைந்து நடத்தும் முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஊராட்சித்தலைவர் .கோ.பாலசுப்ரமணியன் உடனிருந்தார்முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பின்லே மேல்நிலைப்பள்ளி மன்னார்குடியில் நடைபெற்றது முகாமில், மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மேலும், அடையாள அட்டை பெறாத நபர்களும், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்காகவும் (ருனுஐனு ஊயசன), அரசின் திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படுவோர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் அடையாள அட்டை பெற்றவர்களும் தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை மனுக்களுக்காக அளித்தும் பயன்பெற்றனர்.
முகாமில், மாற்றத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.34,500 மதிப்பிலான நலவாரிய கல்வி உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
நிகழ்வில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கீர்த்தனா மணி, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் புவனா வட்டாட்சியர் கார்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்