புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு கவனத்துடன் சிகிச்சை அளிக்கும் வகையில் தி கார்டியன் எனும் திட்டத்தில் கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் பாலியேட்டிவ் கேர் எனும் பிரத்யேக வார்டு துவக்கப்பட்டது…

புற்றுநோயுடன் மன உறுதியுடன் போராடி குணமடைந்தவர்களையும் நோயிலிருந்து மீண்டுவர அவர்களுக்கு உதவிகரமாக செயல்பட்டவர்களை பாராட்டும் வகையிலும் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் ஒவ்வொரு வருடமும், ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக 11 வது ஆண்டாக நடைபெற்ற ரோஸ் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களை சிறப்பு கவனத்துடன் சிகிச்சை வழங்கி பராமரிக்கும் பிரத்யேக பாலியேட்டிவ் கேர் மையம் துவங்கப்பட்டது.

கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி.பழனிசாமி,உதவி தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில்,பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார்..

ரோட்டரி கிளப் கோயமுத்தூர் மெரிடியன் மற்றும் ஆட்டிடியூட் சாரிடபிள் டிரஸ்ட் ஆகிய இரண்டு அமைப்புகளும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையுடன் இணைந்து ‘தி கார்டியன்’ என்ற திட்டத்தின் கீழ் புற்றுநோய் பாதித்த ஏழை எளிய மக்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை வழங்கும் வகையில், பாலியேட்டிவ் கேர் மையம் துவங்கப்பட்டுள்ளது..

கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் இந்த வார்டில் நோயாளிகளுக்கு சலுகை கட்டணங்களில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

பாலியேட்டிவ் கேர் என்ற இப்புதிய சேவைப்பிரிவின் மூலம் கேஎம்சிஹெச் அளிக்கும் புற்று நோய் மருத்துவம் மேலும் முழுமைபெற்ற சேவை மையமாகத் திகழ்வதையும், பாலியேட்டிவ் கேர் என்ற மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தையும் மருத்துவமனையின் செயல் இயக்குனர் அருண் பழனிசாமி எடுத்துரைத்தார்.
ரோஸ் தினத்தை முன்னிட்டு தொடர்ந்து கேஎம்சிஹெச் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள். அவர்கள் குடும்பத்தினர். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *