அரசு போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? – ஐ.ஆர்.எஸ்.பேச்சு
சுங்கவரித் துறை முன்னாள் துணை ஆணையாளர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்…

திருமுறை ஓதுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பட்டுக்கோட்டை சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளையால் நடத்தப்பட்ட திருமுறை ஓதுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது .
ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .விழாவில் திருச்சி சுங்க வரி துறையின் முன்னாள் துணை ஆணையாளர் ஆர் . பாலசுப்பிரமணியன் ஐ.ஆர்.எஸ். பங்கேற்று திருமுறை ஓதுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் , குறிக்கோளை அனைத்து மாணவர்களும் இளம் வயதில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நாம் வெற்றி பெற்றவர்களாக ஒரு காலத்தில் மாறமுடியும்.தமிழ்நாடு அரசு பணிகளில் தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை அவசியம் படித்தாலே அரசு தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம். வாழ்க்கையில் இளம் வயதில் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து நன்றாகப் படித்து மிகப் பெரிய பதவிகளுக்கு வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.
உங்களால் நிச்சயமாக முடியும் என்று பேசினார்.பட்டுக்கோட்டை சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளையால் நடத்தப்பட்ட திருமுறை ஓதுதல் போட்டியில் வெற்றி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.