கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி நடைபெற்றது. ஓவியப்போட்டியில் மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்,மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் ஓவியம் வரைந்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ப உலக ஓசோன் தினம் குறித்து பேசியதாவது
புவி மண்டலத்திலிருக்கும் ஓசோன் படலம் தான், நம்மை சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும்.
இது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம் ஆகும்(O3). அதாவது மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தது ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும்.
ஓசோனின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாப்பதுதான். ஸ்ட்ரேடோஸ்பியரில் உள்ள ஓசோனின் அளவு 1 சதவீதம் குறைந்தாலும் பூமியை வந்து அடையும் புற ஊதாக்கதிரின் அளவு அதிகரித்து உயிரிகளின் டிஎன்ஏவை நேரிடையாக பாதிக்கும்.
இதனால் அனைவரும் கடலுக்கு அடியிலோ தரைக்கு அடியிலோ பதுங்க வேண்டிய நிலை ஏற்படும். உயிரினங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
எனவேதான் இந்த ஓசோனை பாதுகாக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் செப்.16ம் தேதி சர்வதேச ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் தன்னார்வலர் மாரியம்மாள் கலந்து கொண்டனர்.