கடலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே ஆர் தனஞ்செழியன் தலைமையில் நடந்தது
(வி. தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி)
புதுச்சேரி செப்டம்பர் 16
ரெட்டிசாவடியில் அண்ணா பிறந்தநாள் விழா முன்னிட்டு இனிப்பு தென்னங்கன்று வழங்கி உற்சாக கொண்டாட் பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி ஒட்டியுள்ள கடலூர் எல்லைப் பகுதியான கடலூர் வடக்கு பகுதி ரெட்டிசாவடி பகுதியில் திமுக வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே. ஆர் .தனஞ்செழியன் தலைமையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி .கே. மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் கோதண்டபாணி, ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டிசாவடி மெயின் ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு
மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணாவின் புகழ் கலைஞர் புகழ் வாழ்க என்று கோஷமிட்டபடி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்பு,
மற்றும் 115 தென்னங்கன்று
களையும் வழங்கி அண்ணா பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்கள்.