சுண்டக்காமுத்தூர் ஆதிமூல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
கோவை சுண்டக்கா முத்தூர் பகுதியில் பழமை வாய்ந்த ஆதிமூல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது…
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள ஆதிமூல விநாயகர் கோவில் இப்பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயமாக கருதப்படுகிறது.பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படும் இக்கோவில் புணரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில்,ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளார்,சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள்,கோவைபுதூர் சிவன் குடி சித்தர் சாமிகள்,தர்மராஜா அருள்பீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,, முன்னதாக மகா கணபதி ஹோமம் புனித தீர்த்தம் கொண்டு வருதல் பாவனபிஷேகம் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் யாகசாலை அமைக்கப்பட்டு முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், மற்றும் நான்காம் கால பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட புனித நீர் சுவாமிக்கும்,விமான கோபுரத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்நாள் அமைச்சர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வேலுமணி இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் நல்ல நேரம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பொறியாளர் சந்திரசேகரன் சீனிவாசன் பேரூர் காவல் ஆய்வாளர் செல்வகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்..
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழாவை காண கோவைபுதூர்,சுண்டக் காமுத்தூர்,செட்டிபாளையம் என கோவையை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பெருந்திரளாக வருகை புரிந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது… விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டியார் மூர்த்தி, முரளிதரன், ஆனந்தகுமார், பிரகாஷ், முருகேசன், பசுபதி கண்ணன் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் சுரேஷ்குமார், செந்தில்குமார், பிரகதீஷ், சதீஷ் கண்ணன், பிரபாகரன், ராஜசேகரன், ஆகியோர் செய்திருந்தனர்