பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே
சக்கராப்பள்ளி ஊராட்சியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நலத்திட்ட உதவிகள் …
மாநிலங்களவை உறுப்பினர் வழங்கினார் …

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி ஊராட்சியில்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சக்கராப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா பாபநாசம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நாசர் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினரும் தஞ்சை வடக்கு மாவட்ட. திமுக செயலாளருமான கல்யாணந்தரம் ,திமுக மாநில மருத்துவர் அணி துணை செயலாளரும் தஞ்சை மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை சக்கராப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மோனிஷாவிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்கள் , நிர்வாகிகள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள்என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.