வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 125 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் பா. சிவனேசன் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை கணேஷ்வதி தலைமையில்,பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சரவணன், பொருளாளர் புருஷோத்தமன்,துணை செயலாளர் வி. சி. ராஜேந்திரன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆசாத் பேகம் குலாம் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 125 மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் பா. சிவனேசன் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் வேளாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளியின் ஆசிரிய ஆசிரியர்- ஆசிரியை கள், மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.