பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்
விழுப்புரம் வடக்கு மயிலம் தொகுதி கூட்டேரிப்பட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 73 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மாவட்டத் தலைவர் AD இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் ஸ்ரீராம் அறக்கட்டளை அரிகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் K.பாண்டியன், மாவட்ட செயலாளர் சந்திரலேகா விஜயன், மயிலம் கிழக்கு மண்டல தலைவர்K. அசோகன், மயிலம் மேற்கு மண்டல தலைவர்பிரசன்ன ராம், ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் தர்மன், மண்டல பொதுச்செயலாளர்கள் குப்பன்,சக்திவேல், மண்டல பொருளாளர் செந்தில் குமார், விவசாய அணி மாவட்ட செயலாளர் தமிழரசன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் முல்லை குமார், மண்டல் செயலாளர் வெங்கடேஸ்வரி, ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சுரேஷ்,மண்டல துணைத் தலைவர் பாலமுருகன் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டார்கள்.