உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி நடைபெற்றது. அதில் 252.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்க பதக்கம் வென்றார். பிரெஞ்சு வீராங்கனை ஒசியனே முல்லர் 2-வது இடம் பிடித்தார்.
