பெரியார் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது உருவப்படம் மற்றும் அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியார் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மூடநம்பிக்கை மற்றும் அறியாமை எனும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி ‘கல்வி’ எனக் கூறியவர் பெரியார். சமூகநீதி, சமத்துவத்திற்காக பாடுபட்ட மாபெரும் சமூக சீர்த்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம்!” என்று தெரிவித்துள்ளார்.

பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த நாளில் சமூக நீதி காக்க உறுதிமொழி ஏற்க வேண்டும் என அறிவுறுத்தினார். அந்த வகையில் இன்று பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. திமுக சார்பில் இன்று சமூகநீதி நாள் உறுதி ஏற்பு நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *