தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோவை சுந்தராபுரம் பகுதியில் தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டுசெய்யப்பட்டது…

தந்தை பெரியாரின் 145 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் புகைப்படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னனி நடிகரின் விஜய்யின் இயக்கமான விஜய் மக்கள் இயக்கத்தினரும் தந்தை பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் படி கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..
கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கோவைK விக்கி,தலைமையில் நடைபெற்ற இதில், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தொண்டரணி தலைவர் கிரிஷ், மாணவரணி தலைவர் பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் அருண்ஈஸ்வர், வைரமுத்து, பரத், எட்டிமடைபாலு, இளைஞரணி நிர்வாகிகள் ரத்தினபுரிராஜா,அருண், ரோகித், செந்தில்,கவுதம்,தொண்டரணி நிர்வாகிகள் பிரவீன், சரவணன்,பவீன்,பாலாஜி,வாசீம்,மாணவரணி முத்து, மகளிரணி லதா,சிந்து,மஹாலட்சுமி,கார்திகா,சமீர், பிரபு, திலிப்,வினோத்,சிலம்பரசன்,மதுக்கரை நாகராஜ்,முருகேஷ்,ரமேஷ்,கிணத்துகடவு பழனிச்சாமி, சேகர், ரமேஷ், செந்தில்,பொள்ளாச்சி தமிழ், சரவணன், ஸ்டீபன், பிரபுடேனியல், இனையதள சங்கர், அஜய், நவநீதன், அழகேசன், சந்தோஷ் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *