வலங்கைமான் ஒன்றிய முழுவதும் ஒன்றிய பாஜக சார்பில்பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களில் 73 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் கொடியினை ஏற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றிய முழுவதும் ஒன்றிய பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார்கள்.
வலங்கைமானில் ராமர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்,பாஜக வலங்கைமான் ஒன்றிய தலைவர் கலையரசன் தலைமையில், ஒன்றிய செயலாளர் ச.செ. சாமிநாதன்,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் காளிதாசன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராஜு, பட்டியல் அணி முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து,அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாஜக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.