பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டத்தில் வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு 36 ஆம் ஆண்டு நினைவு வீரவணக்க நிகழ்ச்சி பாமக சார்பில் நடைபெற்றது.
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி 20 சதவிகித இட ஒதுக்கீடை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான 21 தியாகிகளுக்கு ஜெயங்கொண்டம் பாமக நகர செயலாளர் பரசுராமன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினனர்
இதில் நகரத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராமதாஸ் பாமக நிர்வாகி மைனர் ஒன்றிய செயலாளர்கள் ஆச்சி இளங்கோவன் கலியபெருமாள் ஒன்றிய துணைத் தலைவர் ஆர்மி குமார் முன்னாள் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கழுவந்தோண்டி கொளஞ்சி மாணவர் அணி ஒன்றிய செயலாளர் வினோத் நகர அமைப்பு செயலாளர் V. அருண்குமார் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அன்பு கணேஷ் நகர மாணவரணி செயலாளர் நெடுமாறன் சுரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்