கோவை மேட்டுப்பாளையம் செய்தியாளர் சத்தியமூர்த்தி.
மேட்டுப்பாளையம் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை திருத்தல தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் தேர் திருவிழாவை முன்னிட்டு திருக் கொடியேற்றம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.இதை அடுத்து அன்னைக்கு தினந்தோறும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேர் பவனி இன்று சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக திருத்தேர் பவனியை முன்னிட்டு ஆடம்பர திருப்பலி திருவருட் சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து ஆடம்பர கூட்டுபாடற் திருப்பலி அருள்பணி ஜோசப் டேவிட் தலைமையில் நடைபெற்றது.ஆடம்பர திருத்தேர் பவனியை அருள் பணி பிரான்சிஸ் ரொசாரியோ அர்ச்சித்து துவக்கி வைத்தார் திருத் தேரானது மேட்டுப்பாளையத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று சென்றனர்