செங்குன்றத்தில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை ஒத்திகை நிகழ்ச்சி.
தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் சார்பில் செங்குன்றத்தில் உள்ள தனியார் தொழிற் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த தீ ஒத்திகை நிகழ்ச்சியை கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தீயணைப்பு மாவட்ட அலுவலர் தென்னவன் மற்றும் உதவி அலுவலர் பொன் மாரியப்பன் நிலையை அலுவலர் பற்குணன் செங்குன்றம் நிலைய அலுவலர் சீனிவாசன் ஆகியோர்கள் கல்லூரி மாணவ மாணவிகளிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இதில் வருகின்ற மழைகாலங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தால் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் வெள்ளத்தில் தத்தளிக்கும் பொது மக்களை எவ்வாறு அதாவது தங்கள் வீட்டில் உள்ள தெர்மாகோல் ,தண்ணீர் குடம், கேன்கள் ஆகிய பொருட்களைக் கொண்டு படகு போல் உருவாக்கி யாரும் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்ற வேண்டும் எனவும் மேலும் தீ விபத்து ஏற்பட்டால் அதற்கு நாம் முதல் என்ன செய்ய வேண்டும் எனவும் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டரில் தீ பற்றி கொண்டால் அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது போன்றகவிழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும் தீயணைப்பு நிலையத்தில் உள்ள கருவிகள் மரம் அறுக்கும் எலக்ட்ரிக் ரம்பம் ரப்பர் படகுகள் தீயணைப்பு வீரர்கள் உடைகள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் குறித்த உபகரணங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.