நாமக்கல்
தந்தை பெரியாரின் 145 பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தந்தை பெரியாரின் திருவருவை சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊர்வலமாக வந்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் பாலா உள்பட மாவட்ட , நகர, ஒன்றிய ,சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.