நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர பாஜக சார்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கோனரிப்பட்டி வனச்சரக அலுவலகம் அருகில் நடைபெற விழாவில், பாஜக., மாநில துணைத்தலைவர் கே. பி. இராமலிங்கம் கலந்து கொண்டு கேக் வெட்டி, கொண்டாடினனார் இராசிபுரம் நகர பாஜக தலைவர் வேலு உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு பகுதியில் பாஜக.,வினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர் தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.