நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாள் விழா, சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது.
இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் திருவுருவப்படத்திற்கு இராசிபுரம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி.பாலு, முன்னிலை வகித்து பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழக இராசிபுரம் நகர செயலாளர் பிடல் சேகுவேரா தலைமையில், அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் நிர்வாகிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் வைகறை சேகர், ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைச் செயலாளர் கண்ணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைலாஷ், உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பெரியாருக்கு பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி புகழஞ்சலி கோஷங்கள் எழுப்பி சிறப்பாக கொண்டாடினர்.