கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கடைவீதியில் தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் எனவும்,
ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் அனைத்து வேலைவாய்ப்புகளையும் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவலஞ்சுழி ஊராட்சி செயலாளர் சங்கர் தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் , கும்பகோணம் மாநாகர செயலாளர் சங்கர் , வாடகை வீட்டில் குடியிருப்போர் சங்க மாவட்ட செயலாளர் கோபி , செல்வம் மற்றும் பெண்கள் உட்பட 30. – திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.