கோவையில் அகில பாரத மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றதோடு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் இந்துக்களின் முக்கிய பண்டியாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்க்கள் பக்தி பரவசத்தோடு வழிபாடு நடத்தி விநாயகரை வணங்கி வருகின்றனர். விநாயகருக்கு அருகம்புல், எருக்கம்பூ மாலை அணிவித்து கொழுக்கட்டை, அவல் படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதே போல கோவையை வடவள்ளி அடுத்துள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகில பாரத மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநிலத் தலைவர் பாபு பரமேஸ்வரன் முன்னிலை வகித்த இதில் சிறப்பு அழைப்பாளராக சக்தி சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் அன்பு மாரி கலந்து கொண்டார்.
மேலும் இதில் பாஜகவை சேர்ந்த வெங்கடேசன், கோவை மாவட்ட தலைவர் சிவா, துணைத் தலைவர் சேகர், மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், வழக்கறிஞர் அணி அஜய், இளைஞர் அணி தலைவர் சதீஷ், மகளிர் அணி தலைவி இந்திரா, மண்டல தலைவர்கள் வினோத்,ராஜேஷ், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் நாகராஜ், உங்கிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.