அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின பொன்விழாவை முன்னிட்டு சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டியம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியின் சார்பில் வீடுகள் தோறும் விநாயகர் வீதிகள் தோறும் விநாயகர் என்ற முழக்கத்துடன் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன்சம்பத், ஆணைக்கிணங்க தென் மாநில இளைஞரணி தலைவர் குருநாதன், கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலையை பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு இலவசமாக வழங்கி தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்
இதில் தொகுதி தலைவர் பூமிநாதன், ஒன்றிய தலைவர் மதுரைவீரன், ஒன்றிய செயலாளர் ரவி, பொருளாளர் பாண்டீஸ்வரன், துணைத் தலைவர் தனபால், பாஜக மண்டல செயல் குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, மேற்கு மாவட்ட தலைவர் சிங்கராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கல்லணை கலைவாணர்நகரில் அமைந்துள்ள
ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.