அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார்கோயிலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சோழவந்தான் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் மெடிக்கல் ரமேஷ் தலைமையில் புதியதாக பொறுப்பாளர்கள் நியமன அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முதல் தீர்மானமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர் இரண்டாவது தீர்மானம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் வேட்பாளராக யாரை நம்மவர் கைகாட்டுகின்றாரோ அவருக்காக சோழவந்தான் தொகுதி முழுவதும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விமல்ராஜ் பொதும்பு ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் யோகநாதன், ஜெயபிரகாஷ், உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.