ஜெ.சிவகுமார் திருவாருர் மாவட்ட. செய்தியாளர்
மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை போராட்டம்
மன்னார்குடியில் ஆட்டோ நிறுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் லத்தியை காட்டி மிரட்டிய காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று
18.09.23 காலை 10.00 மணிக்கு முற்றுகைப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பு மன்னார்குடி தேரடியில் இருந்து ஊர்வலமாக கிளம்பும் போது, மாவட்ட
ஏ.டி.எஸ்.பிவெள்ளைத்துரை அவர்கள் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் காவல் துணை கண்காணிப்பாளர் நேற்று அத்து மீறி நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தும்
அடுத்த வாரத்திற்குள் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்கள் போடுவதற்கு ஒரு சுமுக முடிவை ஏற்படுத்தித் தர உறுதியளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் 300 க்கும் அதிகமான ஆட்டோ தொழிலாளர்களும்,
சிஐடியு நிர்வாகிகளும், முன்னணி ஊழியர்களும் கலந்து கொண்டனர்