பண்ணந்தூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் வீட்டில் பணம் கொள்ளை
கிருஷ்ணகிரி மாட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). பண்ணந்தூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 16ம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று 17.09.2023 இவரது வீட்டின் அருகே இரவது உறவினர் சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, திருப்பதியில் இருந்த செந்தில்குமாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே அங்கிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை வந்த செந்தில்குமார், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8½ சவரன் தங்க நகைகள், எல்.இ.டி. டிவி, ரொக்கம் ரூ.25,000/- மற்றும் நிலப்பத்திரம், அசல் ஆவணங்கள் உள்ளிடவை திருடப்பட்டது
அறிந்து பாரூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில் அங்கு வந்த பாரூர் காவலர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டை தீவரமாக சோதனை செய்தனர். அப்போது துணிகளுக்கு இடையே இவர்கள் வைத்திருந்த 8½ சவரன் தங்க நகைகள் திருடப்படாமல் கீழே விழுந்திருந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
பின்னர் பணம் ரூ.25,000/- மற்றும் நிலப்பத்திரம், அசல் ஆவணங்கள் மட்டும் திருப்பட்டதை வழக்காக பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.