கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்திற்கு மத்தூர் ஒன்றியம் சிவம்பட்டி எல்லையில் மத்தூர் மேற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் விவேகானந்தன் சந்திரசேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மத்தூர் பேருந்து நிலையம் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழகத்தின் கொடியேற்றி வைத்து நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
இதைதொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் எல். முருகன் கழக இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பு ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர்கள் பிரபு (எ)பெரியசாமி, வேலு, மாவட்ட துணைச் செயலாளர் எல். சதீஷ் அவைத் தலைவர்கள் எம். ஆர்.அன்பு, வெற்றிவேல், பொருளாளர்கள் சக்திவேல், சங்கர், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் அப்பா பிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர்.