நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் , பேட்டை வேலூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பஞ்சமுக ஹேரொம்ப மகா கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது
உலக மாந்தர் அனைவரும் நலம் பெறும் பொருட்டு ஆவணி மாதம் 29 ஆம் நாள் 15.09 .2003 வெள்ளிக்கிழமை தொடங்கி புரட்டாசி மாதம் 2 ஆம் நாள் 19.09.2023 வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி வரை 5 நாட்கள் விசேஷ அலங்கார ஆராதனைகள் நடைபெற்று வருகிறது,
சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் ஸ்ரீ நகரம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மகிளா சமாஜ ஸ்தாபகர் யதீஸ்வரி ஸ்ரீமத் ஸ்ரீ மாதம்மா சரஸ்வதி ஸ்ரீ மாதா ஜி வழித்தோன்றல்கள் தவத்திரு யோகினி ஸ்ரீ சவாம்பா சரஸ்வதி ஸ்ரீ மாதாஜி தவத்திரு யோகினி ஸ்ரீ வித்யாம்பா சரஸ்வதி ஸ்ரீ மாதாஜி ஆகியோர் தலைமையில் சமாஜ யோகினிகளால் செய்விக்கப்பட்டு, பொதுமக்களும் ,பக்தகோடிகளும் விழாவில் கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதியின் அருளை பெற்று வருகின்றனர்
2023 ஆம் ஆண்டு பஞ்சாங்கத்தின்படி புராட்டசி 1 ஆம் தேதி 18.09.2023 ஆம் நாள் திங்கள் கிழமை உச்சி பொழுது முதல் 19.09.2023 செவ்வாய்க்கிழமை புரட்டாசி 2 ஆம் தேதி உச்சி பொழுது வரை விநாயகர் சதுர்த்தி விழா யாகம், அலங்காரம், தனபூஜை, சுமங்கலி பூஜை , தீப பூஜை ,மகா ஆராதனை பிரசாதம் வழங்குதல் ஆகியவைகள் 2 நாட்கள் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி அன்னதானத்துடன் ( 19 ஆம் தேதி ) முடிவடைய இருக்கிறது
பொதுவாக 18ஆம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி என்று பொதுமக்கள் வருவார்கள் என்பதற்காக இன்றும் பக்தர்கள் வருகைக்கு சுவாமி தரிசனம் ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டது
நாளை 19ஆம் தேதி முக்கியமாக விநாயகர் சதுர்த்தி விழாவும் ஆராதனையும் அபிஷேகங்களும் முறைப்படி நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது
தொடர்ந்து 18-ஆம் தேதியும் 19ஆம் தேதியும் பரமத்தி வேலூர் , பேட்டை வேலூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பஞ்சமுக ஹேரொம்ப மகா கணபதியின் வினாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது
என்பது குறிப்பிடதக்கது