வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி வாழைகட்ட தோப்பு தெருவில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று குடமுருட்டி ஆற்றில் கரைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி, வாழைக்கட்ட தோப்புத் தெருவில் உள்ள, பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் முன்புறம் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு, இன்று (18ஆம் தேதி ) மாலை ஊர்வலமாக எடுத்துச் சென்று குடமுருட்டி ஆற்றில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வாழ கட்ட தோப்பு தெருவாசிகள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.