எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து. வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சமையலர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மதிய உணவிற்காக சமையலர் கலா உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்.
அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார் அந்த நேரம் திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையம் உபகரணங்கள் சேதமடைந்தன.
சமையலர் கலா வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். 47 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமையலறை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் அமைக்க கோரி பலமுறை சீர்காழி நகராட்சியில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மதிய உணவு நேரத்தில் பள்ளி குழந்தைகள் சமையலறை கட்டிடத்தில் உள்ளே அமர்ந்து உணவு அருந்துவ வழக்கம். அப்பொழுது இந்த விபத்து நேர்ந்திருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என அச்சம் தெரிவிக்கும் துறையூர் பகுதி மக்கள் உடனடியாக பாதுகாப்பற்ற கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்