கோவையை சேர்ந்த பிரபல நடிகர் பிரதீப் ஜோஸிற்கு “ஜனங்களின் பிரியன்” எனும் விருது…
அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் அறிவிப்பு…
கோவை கவுண்டம்பாளையைம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் ஜோஸ்.தொழிலதிபர்,பட தயாரிப்பாளர்,நடிகர்,சமூக சேவகர் என பன்முகங்களை கொண்ட இவரை பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வள்ளல் சக்கரவர்த்தி என அன்பாக அழைக்கின்றனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் பிரதீப் ஜோஸ் அண்மையில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளுக்கு உதவிகளை வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
இந்நிலையில் இவரது பல்வேறு விதமான சமூக சேவைகளை பாராட்டி இவருக்கு, ஜனங்களின் பிரியன்” என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது..
அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பாக இந்த விருது வரும் அக்டோபர் 22 ந்தேதி வழங்கப்பட்ட உள்ள நிலையில்,விருது பெற போகும் நடிகர் பிரதீப் ஜோஸிற்கு அவரது குடும்பத்தினர், ரசிகர்கள்,பொதுமக்கள் என பலரும் அவருக்கு நேரிலும்,தொலைபேசி வழியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
இதில், அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ். மற்றும் அனைத்து கிறிஸ்தவ மக்கள் மறுமலர்ச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கோவை. ஜேசுதாஸ் மற்றும் வெற்றி பாலாஜி ஆகியோர் உள்ளனர்…