கோவை காட்டூர் ராம்நகர் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவது தொடர்பான தகவல் பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விடுபட்டவர்களுக்கான முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது…
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பெரும்பான்மையான பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்ற திட்டம் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டு தற்போது சுமார், ஒரு கோடிக்கு மேலான பெண்கள் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில்,இது குறித்து பொதுமக்களுக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கினார்.
பின்னர் நல்ல திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெரியகடைவீதி பகுதிக்கழக தலைவர் பக்ருதீன்,, வழக்கறிஞர் கணேஷ் குமார், வட்டக்கழகச் செயலாளர் விஜயகுமார்,மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார்,தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை சம்பத்,ராஜ்குமார்,சூர்யா உட்பட கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.