சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி 24.ம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீநிதி விநாயகர் கோவிலில் நடந்த 108 குத்துவிளக்கு பூஜையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்.எஸ்.ஸ்ரீமதி.துவக்கிவைத்தார்.
சேவாபாரதி கிராம சேவிகா. ஜெயலெட்சுமி.விளக்கு பூஜை செய்தார்.இரவு கிராமிய கும்மிபாட்டு கலைலநிகழ்ச்சி நடந்தது.இதைதொடர்ந்து நேற்று.விநாயகர் சிலை ஊர்வலத்தை ரமணா பிரசாதானந்தா. தொடங்கி வைத்தார்.
வீதிகளில் விநாயகருக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.பின்னர்.நெடுங்குளம் கண்மாய் கரையில் அமைந்து உள்ள அய்யனார் கோவில் சிறப்பு பூஜைகள் செய்து குளத்தில் விநாயகரை கரைத்தனர் இரவு 1000 பேரூக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இவ்விழா ஏற்பாடுகளை விழா குழவினர்.கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் இதேபோல் மன்னாடிமங்கலம் குருவித்துறை தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.