திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணியம் திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் செவ்வாய்க் கிழ மையில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிப்படுவது வழக்கம் இதனையடுத்து பக்தர்களுக்கு போதிய வசதிகள் சரிவர உள்ளதா என பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு செய்தார்.
அப்பொழுது அங்கு வந்த சின்னம் பேடு ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா ஊராட்சி உட்பட்ட அரச மரம், காலனி ஆகிய இரு இடங்களில் பேருந்து நிலை யம் காலணி அங்கன்வாடி கட்டிடம், காலனி எல்லையம்மன் கோவில், பொது தெரு, ஆகிய பகுதிகளுக்கு சிமெண்ட் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகள் செய்து தருமாறு கோரிக் கை விடுத்தார்.
இதனையடுத்து மேற்கண்ட பகுதி களை எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுப் பதாக தெரிவித்தார். இந்த ஆய்வி ன் போது சின்னம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா உடனிருந்தனர்.