புதுச்சேரி பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி மாணர்வகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகராக தொடர்ந்து 6-வது ஆண்டாக மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி சார்பாக வழங்கப்பட்டது

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி, சகாயமேரி பாத்திமா அவர்கள் தலைமையில் ஆசிரியை திருமதி, பானுமதி அவர்கள் வரவேற்றார், DSCS தலைவர், பூணாங்குப்பம் ஆனந்தன், விவசாய சங்க தலைவர் திரு.குமரசாமி தன்னார்வளர், கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்பு செய்தனர். முடிவில் ஆசிரியர் ஆனந்தன் நன்றி கூறினார், இதில் 200 மாணவர்கள் அடையாள அட்டை பெற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.