கோவையில் திருப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நகராட்சி நிர்வாகத்துறை பயிற்சி மையத்தின் சார்பாக நேற்று கோவையில் நடைபெற்றது
இந்த பயிற்சி முகாமில் வால்பாறை நகராட்சியின் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் நகராட்சி துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
அப்போது நகராட்சி நிர்வாகத்துறையினரிடம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடத்துவது போல உறுப்பினர்களுக்கும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்க் கொண்டால் நலமாக இருக்கும் என்று நகர்மன்ற துணைத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்