வலங்கைமான் கடைவீதியில் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு திருமணம் நிறைவேற்றப்பட்டதுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாஜக மகளிர் அணி சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில், வலங்கைமான் ஒன்றிய பாஜக மகளிர் அணி சார்பில், பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, ஒன்றிய மகளிர் அணி தலைவர் சத்தியா பாண்டியன் தலைமையில் வான வெடிகள் வெடித்து, பிரதமர் மோடியின் படத்துடன் இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பொன்னி, கலாவதி,நேத்ரா, சீதா, ராணி, வள்ளி, மகேஷ், பிரியா மற்றும், வலங்கைமான் பாஜக ஒன்றிய செயலாளர் ச. செ. சுவாமிநாதன் வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளர் காளிதாசன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராஜு, அமைப்பு சாரா ஓட்டுநர் பிரிவு முன்னாள் நகர செயலாளர் தங்கப்பாண்டியன், நீத்துக்கார தெரு தெரு ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.