தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் ஜோ.லியோ.

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக 31வது பட்டமளிப்பு விழா வேந்தர் டாக்டர் கி.வீரமணி பங்கேற்பு.

தஞ்சாவூர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் கல்விப் பணியில் 35 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த முதன்மைப் பல்கலைக்கழகமாக விருது பெற்றுள்ள, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 31-ஆம் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையில் நடைப்பெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு தலைமையுரை மற்றும் பட்டம் கொடுத்து அவர் பேசியதாவது:- பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் தங்கள் இலக்கை உயர்வாக நினைத்து வாழ்வில் வெற்றி பெற மிகவும் பாடுபட வேண்டும் என கூறினார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் பொறியியல் தொழில்நுட்பம், கட்டட எழிற்கலை, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைப் புலங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 829 மாணவர்களும் 410 மாணவியர்களும் மொத்தம் 1239 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

இதில் 6 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர். மேலும் இவ்வாண்டின் தரவரிசையில் தகுதி பெற்றவைர்களின் எண்ணிக்கை 100 ஆகும். மேற்கொண்டு 37 தங்கப் பதக்கமும் 33 வெள்ளிப் பதக்கமும் 30 வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி வரவேற்புரையாற்றி பேசியதாவது, மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) ஆக்கப்பூர்வமான சமூதாயச் சிந்தனையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி, பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகம், பெரியார் புரா ஆகியவற்றின் நிகழ்வு கடந்த கல்வியாண்டில் தகுதியான மாணவர்களுக்குப் பல்வேறு அறக்கட்டளையின் சார்பாக கல்வி ஊக்கத் தொகையாக ரூபாய் 3 கோடி வழங்கப்பட்டது.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) (அமெரிக்க- நியூயார்க்கில்) பன்னாட்டு பசுமை பல்கலைக்கழக விருது நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் (செப்டம்பர் 15) நடந்த 7 ஆம் பசுமை கல்வி மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இந்தியாவிலேயே தலை சிறந்த முதன்மைப் பல்கழைக்கழகம் என்ற விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது அனைத்து பட்டம் பெறும் மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.

ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் முன்னிலை வகித்தார், பதிவாளர் பேரா பி.கே.ஸ்ரீவித்யா, தேர்வு நெறியாளர் பேராசிரியர் சு.அசோகன், கல்விப் புல முதன்மையர் பேரா ஜெ.ஜெயசித்ரா உள்ளிட்ட அனைத்து புல முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *